Quantcast
Channel: Thamilhealth.com | Health Information in Tamil
Viewing all articles
Browse latest Browse all 878

பரிசுப்பொருட்களை எப்படி தெரிவுசெய்வது? சிவன்சுதன்

$
0
0

நாம் எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்களுக்குப் பரிசுப்பொருட்களைத் தெரிவுசெய்யும்போது அது அவருக்கு உடற்சுகத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாகவும் நல்ல நினைவுகளைக் கொடுக்கக்கூடியதாகவும் பிரயோசனப்படக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது.

அந்தவகையில் பின்வரும் பொருட்களைக் கருத்தில் எடுக்கலாம். “பழங்கள், முட்டை, ஓவியங்கள், நல்ல புத்தகங்கள், பதிவேடுகள், உடை, தலைக்கவசம், குடை, பாரம் குறைந்த பாதணிகள், வீட்டில் சமைத்த பலகாரங்கள், முட்டைமா, பயற்றம்மா, உழுத்தம்மா, வேலைசெய்யும்பொழுது அணியும் கையுறை, உடற்பயிற்சி செய்யும் இயந்திரம், தாவரங்கள், விதைகள் ” போன்றவை. இப்பொருட்கள் உடற்சுகத்தைப் பேண உதவியாய் இருக்கும்.

நாம் எமது எதிரிகளுக்கும், கோபக்காரர்களுக்கும் பரிசுப்பொருட்களைத் தெரிவுசெய்யும்பொழுது சொக்லெட், இனிப்பு வகைகள், சோடா வகைகள், குடிவகைகள், மிக்சர், மாஜரின், பட்டர், கணினி, விளையாட்டுக்கான சீடிகள், சிகரெற் பக்கெற், பீடிக்கட்டு, பிஸ்கெற் பெட்டிகள் என்பவற்றில் ஒன்றையோ பலவற்றையோ தெரிவுசெய்துகொள்ளலாம்.இவை உடற்சுகத்துக்கு தீங்கு விளைவிப்பவையாகும்.
நாம் இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்யும் பரம்பரையில் உதித்தவர்கள். எதிரியும் சுகத்துடன் வாழவேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள். எனவே, இந்தப் பொருட்களை எதிரிக்குக்கூடப் பரிசாகக் கொடுப்பதைத் தவிர்த்துக்கொள்வோம்.
என்றும் ஆனந்தமும் ஆரோக்கியமும் கொடுக்கக்கூடிய பொருட்களைப் பரிசாகத் தெரிவுசெய்வோம்.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்


Viewing all articles
Browse latest Browse all 878

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>