புதிய மருத்துவ ஆய்வுகள் ஒவ்வொருவரினதும் சுகாதாரக்கவனிப்பு முறைகள், அவர்களின் கலாசாரம், பாரம்பரியம், நம்பிக்கைகள், மொழி, இனம், சுற்றாடல், உணவு முறை போன்ற பல விடயங்கள் சார்ந்ததாக அமைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலைத்தேய சுகாதாரக் கவனிப்பு முறைகள் அனைத்தையும் அப்படியே கண்மூடித்தனமாக நாம் கடைப்பிடிக்க முடியாது. அது சரியானதாகவும் அமையாது. எனவே எமது சொந்த சுகாதாரக் கவனிப்பு முறைகளில் நாம் தன்னிறைவு பெற்று ஆகவேண்டும் எமது மக்களுக்கு ஏற்ற வகையில் மருத்துவக் கவனிப்புக்கள் அமைய வேண்டும்.
- அகத்தியா