Quantcast
Channel: Thamilhealth.com | Health Information in Tamil
Viewing all 878 articles
Browse latest View live

மருந்துவகைகளைப் பாவிக்கும்போது விடக்கூடிய தவறுகள்

$
0
0

நோயாளர்கள் மருந்து வகைகளைப் பாவிக்கும்போது பல்வேறு தவறுகளை விடுகின்றனர். அது மட்டுமன்றி வைத்திய சிகிச்சையை இடைநடுவே தமது சுயவிருப்பின் பெயரில் நிறுத்திக்கொள்ளலும், குறிப்பிட்ட நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உபயோகிக் காமையும் இவற்றில் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும். இது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாகவே இந்த ஆக்கம் தரப்படு கின்றது.

  1. நோய் குணமான பின்பும் மருந்து வில்லைகளை உபயோகிக்க வேண்டும்?”
    சில நோய்கள் மட்டுமே குறுகிய மருந்துகள்மூலம் முற்றாகக் குணப்படுத்தக்கூடியன. சில நோய்களுக்கு நீண்டகால அடிப்படை யில் மருந்துகளைத் தவறாது உள்ளெடுப்பதன்மூலம்தான் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும், தாக்கத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும். இவ்வாறான நோய்களாக உயர் குருதி அமுக்கம், நீரிழிவு (சலரோகம்) போன்றவற்றைக் கூறலாம்.
    சில நோய்கள் குணமாவதற்கு நீண்டகால அடிப்படையில் இடை விடாத சிகிச்சை பெறவேண்டும். நோய் மீண்டும் வருவதற்குச் சிகிச்சையை இடைநிறுத்துதல் காரணமாக அமையலாம். உதாரணமாகக் காசநோய்.
    1. சில நோய்கள் எதிர்காலத்தில் வரலாம் என்ற ஆபத்துடையவர்கள், சில மருந்து வகைகளை முன்கூட்டியே எடுத்து அவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுகின்றனர் என்பதும் குறிப்பி டத்தக்கது. எனவே, சிகிச்சையை இடைநடுவே நிறுத்துதல் எங்கள் நோய் நிலைமையை மேலும் மோசமானதாக்கும் என்பதனைக்கவனத்திற் கொள்வோம்.
  2. “மருந்து மாத்திரைகளைப் போட்டவுடன் எனது தலை சுற்றுகிறது. வயிறு எரிகின்றது. அன்றாடக் கடமைகளை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. அதனால் அந்த மருந்து வகைகளை நான் பாவிப்பதே இல்லை” என்று கூறுகின்றனர். வைத்தியரால் வழங்கப்படும் மாத்திரைகள், நல்ல விளைவுகளுக்கு மேலதிகமாக சிலருக்கு மட்டும் சில வேண்டத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லன. சிலருக்கு ஒவ்வாமை, தலைச்சுற்று, தலைவலி, வாந்தி வருவதுபோல் இருத்தல், வயிறு எரிவு, நெஞ்சு எரிவு போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் அதனை நாம் மறைக்காமல், வைத்தியரிடம் கூறி அந்த மருந்துக்குப் பதிலாக வேறு மாற்று மருந்துகளைப் பெற்றுப் பூரணசுகம் பெறலாம். நாமாகவே சிகிச்சையை இடைநிறுத்தும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகள், பக்க விளைவுகளினை விடப் பல மடங்கு மிகமோசமானவை என்பதனை மனதில் வைத்திருங்கள். உதாரணமாக கட்டுப்பாட்டில் இல்லாத உயர் குருதி அமுக்கம், பாரிசவாதம் போன்ற நோய்களுக்கு இட்டுச் செல்லும்.
  3. “இவ்வளவு மருந்து மாத்திரைகளையும் போட்டால் எனது உடம்பு என்னத்துக்காகும்?”
    அதிக நோய்களைக் கூட்டாக உடையவர்கள் இவ்வாறு நினைக்கிறோம். உதாரணமாக உயர்குருதி அமுக்கம், சலரோகம், இதயநோய்கள் இவை மூன்றையும் கூட்டாக உடையவர்கள் ஒரே தடவையில் ஐந்துக்கு மேற்பட்ட வெவ்வேறு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நேரலாம். மருந்து வில்லைகள் எங்கள் உடல் நிலைமையை மேம்படுத்துவதற்காக அன்றி மோசமானதாக்குவதற்கு அல்ல என்பதனைக் கருத்திற்கொள்வோம். இத்துடன் வைத்தியர் எமக்கு வழங்கும் மாத்திரைகள் நோயைக் குணப்படுத்த மட்டுமன்றி அவற்றில் எங்களுக்குத் தேவையான விற்றமின்கள், கனியுப்புக்கள் அடங்கிய மாத்திரைகளும் அடங்குகின்றன.எமது நோய்க்கான மருந்துகளை நாமாகவே மருந்துக்கடையில் (Pharmacy)இல் வாங்கிப் பாவித்தல் வைத்திய ஆலோசனையின்றி தேவையற்ற – எங்களுக்குத் தெரியாத மருந்துகளைப் பாவனை செய்யும் போது, எங்கள் நோய்களுக்கு மேலதிகமாக மேலும் நோய்களைத் தருவித்துக்கொள்ளும் ஆபத்துள்ளது. நாங்கள் உபயோகிக்கும் அல்லது வைத்தியரால் பரிந்துரை செய்யப்படும் மருந்துகளை மருந்துக்கடைகளில் வாங்கிப் பாவிக்கும்போது அங்கு (Pharmacy) இல் வழங்கப்பட்ட மருந்தும் வைத்தியரால் பரிந்துரைக் கப்பட்ட மருந்தும் ஒன்றா என்பதனை மீண்டும் உறுதி செய்து கொள்வோம். நோயாளர்களாகிய நாம் அனைவரும் வைத்தியரிடம் நாம் உபயோகிக்கும் மருந்துபற்றிக் கேட்டுத் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியவை:
    1. எந்த நோய்க்காக மருந்து வழங்கப்படுகின்றது?
    2. மருந்தின் பெயர்
    3. மருந்தின் நோக்கம்
      – நோயைக் குணமாக்க
      – நோய்க் குணங்குறிகளை அகற்ற/இரண்டுக்குமாக
    4.  எப்போது/எவ்வாறு எந்நேரங்களில் மருந்துகளை உள்ளெடுத்தல்.
    5. ஒருமுறை போட மறந்தால் என்ன செய்வது?
    6. எவ்வளவு காலத்துக்கு மருந்துகளை உள்ளெடுக்கவேண்டும்?
    7. வேண்டத்தகாத பக்க விளைவுகளை அறிந்துகொள்வது எவ்வாறு?
    8. மருந்தில் ஏற்படுத்தும் பாதிப்பு.

 எஸ்.தனிஷன்


மது அடிமை நிலையின் வெவ்வேறு பருவங்கள்

$
0
0

ஒருவர் படிப்படியாக மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் பொழுது அவர் தனது வாழ்க் கையில் பல்வேறு பருவங்களைக் கடந்து செல்வதனைக் காணலாம்.

ஆரம்பப்பருவம்

இந்தப் பருவத்திலே ஒருவர் போதையில் உள்ள நாட்டம் காரணமாக, தனக்கு விரும்பிய அளவு போதை ஏற்படுகின்ற வரையில் குடிப்பார்கள். காலஞ் செல்லச்செல்ல, ஒரேயளவின தான போதை ஏற்படுவதற்கு முன்பு குடித்ததைவிட அதிகளவில் குடிக்கவேண்டிய தேவை ஏற்படும்.

மிக அதிகளவில் குடிப்பவர்கள் சிலரில் மது உள்ளெடுத்த நிலையில் நடந்த சம்பவங்களை ஞாபகத்தில் கொண்டு வருவது கஷ்டமாக இருக்கும். குடியில் ஏற்படும் நாட்டம் காரணமாக மனமோ அடுத்து எங்கே
குடிக்கலாம்? எப்படிக் குடிக்கலாம்? என்பது பற்றிய சிந்தனையிலேயே இருக்கும்.

இடைப்பருவம்

இந்தப் பருவத்தில் இருக்கும் ஒருவர் தான் குடியை நிறுத்த வேண்டும் என்று இடைக்கிடையே விரும்பினாலும், அவரால் தான் குடிக்கும் அளவைக் குறைக்க முடியாமலும், குடிக்கும் நேரம் அல்லது சூழல் இரண்டையும் கட்டுப்படுத்த முடியாமலும் இருக்கும்.

அதனால் அவர் தான் குடிப்பதற்காகப் பல காரணங்களை முன்வைப்பார். சிலர் தமது தொடர்ச்சியான குடிக்கு தமது குடும்பத்தினரை, வேலையை, அல்லது வாழ்க்கைச் சூழ்நிலையைக் காரணம் காட்டுவார்கள். அத்துடன் இந்தப் பருவத்தில் ஒருவரில் அடிக்கடி கோபம் ஏற்படுதல், சண்டை பிடித்தல் போன்ற குணவியல்பு மாற்றங்களும் ஏற்படும்.

வேறு சிலர் தற்காலிகமாக ஒரு சமாளிப்புக்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ அல்லது கோயில் திருவிழா காரணமாகவோ தமது குடியைச் சிறிது காலம் நிறுத்தினாலும், அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் மறுபடியும் அதிகமாகக் குடிக்கின்றமையையும் காணலாம்.

இறுதிப்பருவம்

இந்தத் தீவிரமான பருவத்திலே இருப்பவர்கள் தொடர்ச்சியாகவும் மிக அதிக அளவுகளிலும் குடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உள்ளெடுக்கும் மதுவின் அளவு குறைகின்ற பொழுது அவர்களில் விடுபடல் அறிகுறிகள் ஏற்படும்.

இந்நிலையில் உள்ளோர் தமது தொழில்களை இழந்து, அதிகளவு பொருளாதாரப் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுக் கொள்வதனால் தாம் தொடர்ந்து குடிப்பதற்காகக் கடன் வாங்குதல், பொய் பேசுதல், திருடுதல், பிச்சை எடுத்தல் போன்ற பல்வேறு நடத்தைகளில் ஈடுபடுவார்கள்.

அவர்கள் தமது சுயகெளரவத்தை இழந்து, நண்பர்கள் உறவினர்களால் கைவிடப்பட்டு, கடைசியில் குடித்தால்தான் செயற்பட முடியும், குடித்தால்தான் உயிர்வாழ முடியும் என்கின்ற ஒரு நிலையில் அலைந்து திரிபவர்களாக மாறிவிடுவர்.

நன்றி –

சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்

வடஇலங்கையில் நீரிழிவு நோய் அதிகரிக்கக் காரணம் என்ன?சி.சிவன்சுதன்

$
0
0

நீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்பது உங்களுக்குத் தெரியும்.உலகளாவிய அளவில் ஏறத்தாழ 400 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் 15 ஆண்டுகளில் இந்தத் தொகை 600 மில் லியன்களைத்தாண்டும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

உலகுடன் ஒப்பிடும்பொழுது இலங்கையில் குறிப்பாக வட பகுதியில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இலங்கையிலே நாடளாவிய ரீதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி 10.3 வீதமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் நாட்டின் வடக்கு கிழக்குப்பகுதிகள் உள்ளடக்கப்படவில்லை.

நீரிழிவு நோயின் பாதிப்பு

ஆனால், யாழ்ப்பாணத்திலே அண்மையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படிவளர்ந்தவர்களில் 16.4 வீதமானவர்கள்.நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி 2030 ஆம் ஆண்டளவில் 13.5 வீதமான மக்களுக்கு நீரிழிவு ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்று எதிர்வுகூறப்படுகின்றது.ஆனால்யாழ்ப்பாணத்தில் நீரிழிவு நோயாளர்களின் தற்போதைய விகிதாசாரம் 16.4 வீதமாகும்.

யாழ். போதனா வைத்தியசாலையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் வரும் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் கண் சிகிச்சைப்பகுதி, சிறுநீரகசுத்திகரிப்புப்பகுதி, சத்திரசிகிச்சைப் பகுதி, இருதய சிகிச்சைப் பகுதி, வைத்திய விடுதிகள் என எல்லாப் பிரிவுகளிலும் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைநிலையத்தில் மட்டும் 1534 நோயாளர்கள் பதியப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இலங்கையின் ஏனைய நீரிழிவு சிகிச்சை நிலையங்களுடன் ஒப்பிடும்போது இங்கேதான் அதிகூடிய எண்ணிக்கை யான மக்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறாக வடபகுதியிலே நீரிழிவு நோயாளர்களின் வீதம் ஒப்பீட்டளவில் அதிகரிக்கக் காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதியவர்களின் எண்ணிக்கை

எமது பகுதியில் வாழும் முதியவர்களின் எண்ணிக்கைஒப்பீட்டளவில் அதிகமாகும். அதாவது வடபகுதியில் வாழும் மக்களின் சராசரி வயது இலங்கையில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்பொழுது அதிகமாகும். காரணம் பல இளம் சமூகத்தினரை போரால் இழந்து விட்டோம். பல இளம் தலைமுறையினர் இடம்பெயர்ந்து பிற நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். சென்றுகொண்டும் இருக்கிறார்கள்.எனவே இங்கு வயது கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதால் நீரிழிவுநோயாளர்களின் வீதமும் அதிகரித்துக் காணப்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுமுறை

அத்துடன் வடபகுதி மக்களுக்குத்தான் பிறநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு வரும் பொழுது கிலோக் கணக்கில் சொக்லேட்டுக்களையும் இனிப்பு வகைகளையும் எடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆண்டுதோறும் பல்லாயிரம் கிலோ கண்டோஸ், இனிப்பு வகைகள் வடபகுதிக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றை வீணாக்கக்கூடாது என்ற நோக்கில் எமது மக்கள் அவற்றை உண்டு நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் இங்கு நீரிழிவு அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.

இதற்கு மேலதிகமாக நாம் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு பழ்க்கப்பட்டிருக்கிறோம். வெள்ளை அரிசிச் சோறு, பொங்கல், அவல், பிரசாதம், பாயாசம், கற்கண்டு. மோதகம், றொட்டி, மென்பானங்கள் என சீனி, மா என்பவை அதிகமுள்ள உணவுமுறைக்கு அடிமைப்பட்டிருக்கிறோம்.

உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்குவதில்லை. இவை காரணமாக அதிகரித்துவரும் நீரிழிவுநோயாளர்களின் எண்ணிக்கை ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது.

எனவே நீரிழிவு தடுப்பு நடவடிக் கைகள் அனைத்து மட்டங்களிலும் உத்வேகம் பெற வேண்டிய தேவை இருக்கிறது.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்

மதுவை நிறுத்துவதில் மருந்துகளின் பங்களிப்பு

$
0
0

அநேகமான மக்கள் நம்புவதுபோல் மது பாவிப்பதனை மாத்திரைகள் பாவித்தோ அல்லது ஊசிகள் போட்டோ மறந்துவிடச் செய்ய முடியாது.

உண்மையில் மதுவிலிருந்து ஒருவர் விடுபட விரும்பினால், மதுவானது தனக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்ப தனை உணர்ந்து கொண்டு, தன்னுடைய மன வலிமையின் துணைகொண்டு அதிலிருந்து விடுபடுதலே சாத்தியமானதாகும்.

அவ்வாறன்றி மதுவை நினைத்தவுடன் மறப்பதற்கான, மது இருக்கும் திசையையே நாடாமலிருப்பதற்கான, அதிசயமளிக்கும் மருந் துகள் எவையும் இதுவரை கண்டு பிடிக்கப்பட வில்லை.

ஆயினும் மது அடிமை நிலையிலிருந்து வெளிவர விரும்பும் சிலருக்கு சிலவேளை களில் Disulfram (டைசல்பிடுரம்) என்ற குளி சையைப் பாவிக்குமாறு ஆலோசனை வழங் கப்படுவதுண்டு. டைசல்பிடுரம் பற்றிய சில விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • மதுவைப் பூரணமாக நிறுத்துவதற் கான சிகிச்சையின் ஒரு படிநிலையில் மது பாவனையாளர் தமது மனக்கட்டுப்பாட்டுடன் மீண்டும் மதுவை நாடாமலிருப்பதற்கு உதவி செய்யுமுகமாக “டைசல்பி(F)ரம்” குளிசைகள் கொடுக்கப்படுகின்றன.
  • இந்தக் குளிசையை உட்கொண்டு விட்டு ஒருவர் மது அருந்துவாராயின், அவருக்குத் தீவிரமான, தாங்க முடியாத உடல் உபா தைகள் ஏற்படும். வயிற்றைப் பிரட்டுதல், வாந்தி, நெஞ்சடைத்தல், முகம் சிவத்தல், குரு தியமுக்கம் குறைதல், தலை சுற்றுதல், மயக் கம் வருதல் எனப் பல்வேறு விதமான, கடுமை யான ஆபத்தை விளைவிக்கக் கூடிய அறிகுறி கள் ஏற்படும். இந்த அறிகுறிகளை அனுபவித்த அல்லது அவற்றைப்பற்றி அறிந்துகொள்ளும் நபர்கள் இந்தக் குளிசையை எடுக்கும் வரை தாமாகவே மது அருந்துவதைத் தவிர்த்துக் கொள்வர்.
  • குணமடைந்து கொண்டுவரும் ஒரு மதுஅடிமை நோயாளி, குறிப்பிட்ட காலத்திற்கு இந்தக் குளிசையை நாள்தோறும் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனை உறுதியாகப் பின்பற்றுவதற்கு அவரது குடும்ப உறவினர் ஒருவர் உதவி செய்யலாம். மதுவுக்கு அடிமையான ஒருவர் மது வில்லா வாழ்க்கையை வாழ்வதற்கு “டைசல்பி(F)ரம்” எனப்படும் இம்மருந்து பெருமளவு உதவி புரியும்.
  • மது பாவிக்காத வேளைகளிலும் இந்த குளிசைகளினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றி வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் குளிசை பாவிக்கின்ற பொழுது மது அருந்தினால் எவ்வாறான உபாதைகள் ஏற்படும் என ஒருவர் அறிய விரும்பினால் அல்லது அனுபவிக்க விரும்பினால் அதற்கு “வெறுப் பேற்றும் சிகிச்சை” (Aversion therapy) என்கின்ற ஒரு சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி 

சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்

உணவு தெய்வீகம் (Food is god) வைத்திய கலாநிதி தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா

$
0
0

மனிதன் உயிர்வாழ்வதற்கும் உயர்வு பெறுவதற்கும் மனித நேயமிக்க உயர் பண்புகளுடன் வாழ்வதற்கும் தலையாய துணை போவது அவன் உட்கொள்ளும் உணவு. இதைப் பண்டைக் காலத்து ஞானிகள் தவமுனிவர்கள், அறிஞர்கள் முதல் இன்றைய நவீன விஞ்ஞானிகள் வைத்தியர்கள் வரை அறிந்துள்ளார்கள். “அன்னப் பிரம்மம்” அன்னம் என்பது உணவு பிரம்மம் என்பது இறைவன் எனவே உணவு தெய்வீகமானது. “அன்னம் ந நிந்த்யாத்” “உணவை இகழாதே’ இவை எல்லாம் தேவ வாக்குகள். எனவே இன்றும் நாங்கள் நல் வாழ்வு வாழ்வதற்கு உணவு எப்படி அமைய வேண்டும், நாங்கள் உண்ணும் உணவு எங்களுக்கு எங்கள் உடல் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதா என்பனவற்றை தெரிந்து கொள்வதால் நாங்கள் உடல் ஆரோக்கியத்துடனும் உள்ள உயர்வுடனும் ஆன்மீக வளர்ச்சியுடனும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

நாங்கள் உணவு உண்ணமுதல் உணவு பரிமாறப்பட்டதும். ஒரு சில விநாடிகள் அமைதியாகப் பிரார்த்தனை செய்யத பின்னரே உணவு உண்ணத் தொடங்குகிறோம். இந்தப் பிரார்த்தனை எமக்கு உணவு தந்தருளும் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு உணவு எதற்காக என்பதையும் தெரிவிக்கிற ஒன்றாக அமைவதை ஆதிசங்கர் அன்னபூரணி நாயகியைக் குறித்துப் போற்றிய அன்னபூரணி தோத்திரத்தில் நிறைவாக ஞான வைராக்கிய சித்தியர்த்தம் பி(B)ஸா தேஹி பார்வதி எனக்கு நல்லறிவும் ஆசையற்ற தன்மையும் (நல்லொழுக்கமும்) கை கூடும் வகையில் உணவு தாருங்கள் என்பது இதன் பொருள். இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது நாம் உண்ணும் உணவு நமக்கு நல்லறிவையும் நல்ஒழுக்கதையும் தரவேண்டும். என்பதாகும்.

ஒரு நீதி தவறாத சக்கரவர்த்தி ஒரு சமயம் ஒரு சிறந்த தவஞானியைத் தனது அரண்மனைக்கு அழைத்து உபசரித்தார். மூன்று நாட்கள் தன் அரண்மனையில் தங்க வேண்டும் எனப் பணிவாக வேண்டினார். ம்ன்னரது பக்தியையும் பணிவையும் உணர்ந்த அந்த மாபெரும் தபோதனர் அந்த வேண்டுகோளை ஏற்று அரண்மனையில் தங்கினார். இரண்டாவது நாள் இரவு உணவு ஏற்ற பின் முனிவர் உறங்கச் சென்றார். ஆனால் அன்று அவரால் நிம்மதியாக உறங்க இயலவில்லை. அவரது மனம் பல தீயசிந்தனைகளால் கலங்கியது குழப்பமுற்றது. அரண்மனைப்பொருள்களை களவாட வேணும், தவறான சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அடிக்கடி தலை தூக்கி அவரை கலக்கின. அடுத்த நாட் காலையில் தான் பட்ட அவலத்தைச் சக்கரவர்த்திக்குத் தெரியப்படுத்தி மன்னா இத்தனை காலம் எனக்கு ஏற்படாத தீய எண்ணங்கள் பல என்னைக் கடந்த இரவு கலக்கின இதற்கு நான் நேற்று உட்கொண்ட உணவில் தான் ஏதாவது தவறு ஏற்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிவித்தார். சிறந்த மாபெரும் ஒழுக்க சீலனான சக்கரவர்த்தி அதைப் புரிந்து கொண்டு அரண்மனை உணவு தயாரிப்பவர்களை அழைத்து விசாரித்தார். அப்பொழுது நேற்றுத் தயாரித்த உணவுக்கான பொருட்கள் தவறான இடங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டன என்பது தெரியவந்தது. தவறான உணவு உள்ளத்தைப் பாதிக்கும் என்பதை இதன் மூலம் நாங்கள் அறியலாம்.

விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இன்று இதை நாம் நன்கு விளங்கிக் கொள்ள முடியும். அகத்தூய்மை புறத்தூய்மை இரண்டும் உணவு உண்ணும் போது நாங்கள் உண்ணும் உணவிலும் அவசியமாகிறது.

நாங்கள் உண்ணும் உணவு எமக்கு நலம் தரவேண்டும். நலம் எனும் போது உடல் ஆரோக்கியம் மேலான எண்ணங்கள் இரண்டையும் குறிக்கும். உடல் ஆரோக்கியத்துக்கு எவை எவை உகந்த உணவுகளோ அவற்றை அளவறிந்து காலம் உணர்ந்து தேவைக்கேற்ப நாம் உண்ண அந்த உணவே எமக்கு நல்ல எண்ணங்கள் நல் அறிவு இவைகளைத் தந்து உதவும். இது விஞ்ஞான பூர்வமான உண்மை. அன்று மெய்ஞ்ஞானிகள் காட்டிய உண்மை.

இன்று விஞ்ஞான ரீதியாகப் பார்க்கில் உணவு எல்லாவகையிலும் சீர் அமைந்த்தாக (Balanced Diet) இருக்க வேண்டும். மாச்சத்து (starch) தாதுக்கள் ( Minerals) புரதச்சத்து (Protein) கொழுப்புச் சத்து (Fat) உயிர்ச்சத்து (vitamin) இவை எல்லாம் பொருந்திய உணவு. இந்தச் சத்துக்கள் அவரவர் உடல் தேவைகளைப்பொறுத்து அளவில் மாறுபடும். இவற்றை நாம் தகுதி உணவுக்கலை அறிஞர் மூலம் ( Dietician) அறிந்து கொள்ள முடியும். இங்கு நாம் முக்கியமாக அவதானிக்க வேண்டியது யாதெனில் நாம் “வாழ்வதற்காக உணவே தவிர – நாம் உண்பதற்காக வாழ்வு இல்ல” (we eat to live – not live to eat) என்பதாகும். வள்ளுவம் இதை அழகாகக் கூறும்.

மருந்து என வேண்ண்டாவாம்யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

முன் உண்ட உணவு செரித்தபின் தக்க அளவு உண்டால் உடலுக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.

“அற்றால் அளவு அறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிது உய்க்குமாறு“

உண்ட உணவு செரித்த பின் வேண்டிய அளவு உண்பவன் பெற்ற உடம்மை நெடுங்காலம் வபேணிக் காக்கும் வழியாகும்.

“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்கதுவரப்பசித்து“

முன் உண்ட உணவு சமித்த பின் மாறுபாடில்லா உணவைக் கண்டறிந்து நன்றாகப் பசித்த பின் உண்ண வேண்டும்.

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”

மாறுபாடில்லாத உணவை அளவோடு உண்டால் உயிர் உடம்பில் உறைவதற்கு ஊறு உண்டாகாது.

“இழிவு அறிந்து உண்பான்கண்இன்பம் போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண்நோய்”

குறைந்த அளவு உணவு அளவோடு உண்டால் உயிர் உடம்பில் உறைவதற்கு ஊறு உண்டாகாது.

எனவே எங்கள் உடல் ஆரோக்கியம் உளநலம், தூய சிந்தனைகள் மன அமைதி ஒருமைப்பாடு இவற்றை ஏற்றம் காண வைப்பதற்கான பொருத்தமான தூய உணவை நாம் உண்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் காலம் அறிந்து தேவை கண்டு அளேவோடு அறிவோடு உண்பதுமாம். அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை ஒருபோதும் மறத்தலாகாது.

இன்று அநேகமானவர்கள் தங்கள் உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் எடுப்பதில்லை. வாய்க்குச் சுவை வயிற்றுக்கு வருத்தம் பிழையான உணவுப் பழக்கமே இன்று மிகுந்து காணப்படும் நீரிழிவு, சிறுநீரக நோய்கள், இருதய நோய், குடல் புண், குடல்புற்று நோய், இரத்த அழுத்தம் போன்ற பல பல நோய்கள் அதிகரித்துக் காணப்படுவது நம்மவர்களது தவறான உணவுப் பழக்கத்தாலேஎனின் அது மிகை அல்ல.

வரமுன் காப்பதே அறிவுடமை. இளம் வயது தொட்டு நாங்கள் உணவில் ஆரோக்கிய விதிகளை அறிந்து. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் மேற்கூறிய நோய்கள் எம்மை அணுகாமல் முதுமையிலும் இளமையாக வாழலாம்.

ஆரோக்கியமாக உணவு விதிகளோடு உணவைத் தயாரிப்பதிலும் சுத்தம் பேணுதல் அவசியம். ஒரு முது மொழி கூறுவார்கள் “பாகசுத்தி பாத்திர சுத்தி பரிமாறல் சுத்தி” உணவை சுத்தமாக சமைத்தல் தூய பாத்திரங்களில் பேணுதல் உணவு பரிமாறும் போதும் உண்ணும் தூய்மையாக சுத்தமாக இருத்தல் எல்லாமே சுகவாழ்வுக்கு அவசியமாம். இதை கவனியாத நிலையில் பல தொற்று நோய்கள் உதாரணமாக நெருப்புக்காய்ச்சல், பேதிநோய், வயிற்றோட்டம் கிருமிகள் தாக்கம் போன்றன ஏற்பட வாய்ப்புண்டு.
சுருங்கக் கூறின் உணவு எல்லாவிதமான கூறுகளையும் கொண்ட சீர் அல்லது சம உணவாக (Balance Diet) இருத்தல் உணவை ருசிக்காக அன்றி காலம் அறிந்து உண்ணல் அளவோடு உண்ணல், உண்ணும் பொழுது அமைதியாக ஆறுதலாக மன ஒழுக்கதிதுடன் ( அதாவது ஏனைய கவலைகளை ஒதுக்கி படபடப்பின்றி உண்ணல் TV பார்த்துக் கொண்டோ, கோபம் பட படப்புடன் கதைத்துக் கொண்டோ உண்ணுதல் தவிர்த்து) இதை எல்லாம் நாங்கள் நோய் இன்றி பூரண ஆயுளுடன் வாழ வழி வகுக்கும்.

தூய உணவு என்பதில் தாவர உணவே மிக மிக உயர்ந்தது. சிறந்தது, ஆரோக்கியம் தருவது. அன்பைப் பெருக்குவது. அமிர்தம் போன்றது. தாவர உணவில் இல்லாத சக்தியே இல்லை என்பது உறுதி. ஆராய்ச்சி தந்துள்ள உண்மை. எங்கள் ஆரோக்கியத்துக்கு அவசியமான மாச்சத்து (starch) தாதுக்கள் ( Minerals) புரதச்சத்து (Protein) கொழுப்புச் சத்து (Fat) உயிர்ச்சத்து (vitamin) உலோக்க் கூறுகள் (Minerals) எல்லாமே காய் பழவகை, கீரை வகைகள், தானிய வகைகள், பால், நல்எண்ணெய், சுத்தமாக பசுநெய் போன்றவற்றில் தேவையான அளவு உண்டு. உணவு வல்லுநர்கள் மூலம் (Dietician) இவற்றை நாம் நன்கு அறிந்து கொண்டு எமக்குத் தேவையான உணவைப் பயன்படுத்தி எமது உடல் உள நலத்தைப் சீராகப் பேணலாம்.

இயற்கை எமக்குக் காட்டுவதும் தாவர உணவின் உயர்வை எமக்கு விளக்குகிறது. நீண்ட ஆயுளுடன் தேக ஆரோக்கியத்துடன் நாங்கள் வாழலாம். யானை பசு,எருது,மான்,குதிரை,ஒட்டகம், போன்ற ஆக்க வேலைகள் செய்கிற விலங்குகள் எல்லாம் தாவரங்களையே உண்கின்றன. நீண்ட காலம் வாழ்கின்றன. யானை 100 வருடம் வரை வாழ்கிறது. குதிரை சக்தி அளப்பரியது. மானின் வேகம் எருதின் உழைப்பு பசுவின் புனிதம் இவை பற்றி ஆழ்ந்து சிந்திப்போம்.

மாறாக மாமிசங்களை உண்ணும் மிருகங்கள் 10 -1 5 வருடங்களே உயிர் வாழ்கின்றன. உண்பது உறங்குவது தவிர அவை வேறு என்ன செய்கின்றன?

மாமிச உணவு பலவகையான ஆரோக்கியக் குறைவுகள் உதாரணம் – அமிலம், குடற்புண், வாதநோய்கள், தோல்வியாதிகள், ஆகியவற்றுக்குக் காரணமாக அமைகிறது. விஞ்ஞான பூர்வமாக நவீன மருத்துவர்கள் கண்ட உண்மை பொருளாதா வகையிலும் ஒரு மிருகத்துக்கு 10 – 15 கிலோ தாவர உணவு அளிப்பதன் மூலம் இருவர் உண்ணக்கூடிய 1கிலோ இறைச்சியைத்தான் பெறமுடியும் என அறியமுடிகிறது.

சுருங்கக்கூறின், கிருமி நோய்கள், குடற்புண் (Ulcer) வாத நோய்கள், தோல் நோய்கள், ஆஸ்த்துமா, உளநோய், இருதய நோய், இரத்த அழுத்தம், புற்று நோய், சிறுநீரகக் கோளாறுகள் இவை எல்லாம் உணவிலிருந்து அசைவ உணவு நீக்கப்படுமிடத்து எங்களை அணுகுவதில்லை என்பதை மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே நாங்கள் நீடுழிவாழ்வதற்கு ஆற்றல் மிக்கவர்களாக அறிவு, அமைதி, நற்குணம் கூடி வாழ்வதற்கு உதவும் தாவர உணவுகளை உண்ணுதல் சிறந்ததாகும்.
தாவர உணவு உண்பவர்களும் நோயின்றி வாழ்வதற்கு அளவோடு தேவை அறிந்து, வகை தெரிந்து உண்ண வேண்டும். போதிய அளவு கொதிக்கவைத்து ஆறிய நீர் இயற்கையான பழச்சாறுகள் (போத்தல்கள் அல்ல) அருந்த வேண்டும். இனிப்புப் பலகாரங்கள், Chocolates Ice Cream போன்ற இனிப்பு வகைகள், புளிப்புப் பண்டங்கள் இவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

நிறைவாக நாம் உண்ணும் உணவு நமக்கு உடல் வளத்தைத் தருவதோடு அமையாமல் நம் உள்ளத்தையும் ஓங்குவிக்கிறது. எனவே நாம் உணவு உட்கொள்ளும் போது அமைதியாக, அன்பாக, மனமகிழ்வோடு உண்ண வேண்டும். இயன்றளவு குடும்பத்தினருடன் அன்பர்களுடன் சேர்ந்து உண்ணுதல் நன்று. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, வீண் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டோ ஒரு போதும் உணவு உட்கொள்ளலாகாது. பட படப்பாக, அவசரமாக உண்ணக்கூடாது. உணவு அருந்த முன்னரும் பின்னும் பிரார்த்தனை செய்து இறைவனுக்கு நாங்கள் நன்றி சொல்வதோடு நாம் உண்ணும் உணவை நாம் பெறுவதற்கு எத்தனைபேர் உழைத்திருக்கிறார்கள் என்று நினைவு கூர்ந்து அவர்கள் எல்லோருக்காகவும் பிரார்த்தித்து உண்ண வேண்டும். இது எங்களுக்கு மனநிறைவு, மனமகிழ்வு தரும். அதனால் எமது உடல் சீராக இயங்கும். மனதுக்கும் – எண்ணங்களுக்கும் உடலுக்கும் நேருங்கிய உறவு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள, விளங்கிக் கொள்ள வேண்டும்.

அளவோடு உண்போம்
அமைதியாக உண்போம்
தூய உணவை உண்போம்
தூய்மையான உடல், சிந்தனையுடன்
உண்போம்
குடும்பத்தினருடன் உண்போம்
நன்றி உணர்வுகளுடன் உண்போம்.
நலம் என்றும் பெறுவோம்.

வைத்திய கலாநிதி தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா
பொது வைத்திய நிபுணர்

வேலைத்தளத்தில் மகிழ்ச்சியோடு வேலைசெய்ய ….

$
0
0

நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கவேண்டும். அது உங்களுக்கு வசதியாகவும் ஏற்றதாகவும் இருந்தால் மட்டுமே, உங்களால் நல்ல முறையில் வேலை செய்து சிறந்த பெறுபேற்றைக் கொடுக்க முடியும். நீங்கள் உங்கள்  வேலைத்தளத்தில் பணிகளை மகிழ்ச்சியுடன் ஆற்ற சில விடயங்களைப் பின்பற்ற வேண்டும்.

பொதுவாக நீங்கள் உங்களது முதலாளியை எப்படி சமாளிப்பது என்றும், உங்களது நண்பர்கள் போல நடிக்கும் உங்கள் சக தொழிலாளர்களை எப்படி அடையாளம் கண்டுகொண்டு அதற்கேற்ற போல செயற்படுவது எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணமானது உங்களுடைய சுமையை அதிகரிக்குமே தவிர குறைக்காது. இந்த எண்ணங்களில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தினீர்களானால், உங்களுடைய வேலைகளைச் சரிவர செய்யமுடியாததோடு மன அழுத்தமும் ஏற்பட்டுவிடும். இந்நிலைமையானது நீங்கள் வேறு புதிய வேலை தேடுவதற்கான ஒரு சூழ்நிலையிலே உங்களைக் கொண்டுசென்றுவிட்டுவிடும். அடிக்கடி வேலை மாற்றம் என்பது ஒரு ஆரோக்கியமான தீர்வாகுமா? உங்கள் வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை யோசிப்பதே சிறந்தது. வேலையை விட்டுவிடுவது அல்ல.

நல்ல நண்பர்களை உருவாக்கல்

நீங்கள் வேலை செய்யும் இடங்களில் உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் ஒரு மன ஒன்றிப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நல்லதொரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டும். வீட்டிலேயே எப்போதும் சாப்பிடுவதற்கு பதிலாக உங்கள் உடன் வேலை செய்பவர்களோடு வெளியேசென்று அவ்வப்போது சாப்பிடலாம். வீட்டிலேயே சமைத்துக் கொண்டு வந்து, அனைவருடனும் பகிர்ந்து உண்ணலாம். இது உங்களுக்கு உங்களுடன் வேலை செய்பவர்களுடன் நல்ல ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். இது நீங்கள் பணி புரியும் இடத்தில் நல்ல மகிழ்ச்சிகரமான சூழலைத் தோற்றுவிக்கும். எனவே, வேலைதளத்தில் மகிழ்ச்சியோடு பணியாற்ற எளிய சில வழிமுறைகள் உங்களுக்காக..

சொந்த விடயங்களை எப்போதும், தனிப்பட்டதாகவே வைத்துக்கொள்ளல்

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மிக முக்கியமாக உங்களுடைய சொந்த விடயங்களை நீங்கள் தனிப்பட்டதாகவே வைத்துக் கொள்ளவேண்டும். அவற்றை உங்கள் வேலையோடு சோ்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது. அது எல்லா விதத்திலும் உங்களுடைய பணித்திறமையைப் பாதித்து விடும். எனவே நீங்கள் வேலைத்தளத்தில் மகிழ்ச்சியோடு இருக்க உங்கள் சொந்த விடயங்களை உங்கள் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்.

நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல்

நீங்கள் உழைப்பை வெறுத்தால், பின் உங்களுடைய வேலையும் உங்களுக்கு வெறுத்து விடும். எனவே நீங்கள் சோம்பலுக்கும் கெட்டபழக்கவழக்கங்களுக்கும் இடங்கொடுக்காமல் உற்சாகமாகவும் நியாயமான முறையிலும் உங்களுடைய பணியை ஆற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியாகும்.

தனித்து இருத்தலைத் தவிர்த்தல்

உங்களுடன் பணிபுரிபவர்களுடன் நட்பு மனப்பான்மையுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இந்த நட்பு மனப்பான்மை உங்களுக்கு துன்பங்கள் வரும் போது கை கொடுக்கும். ஆனால் நீங்கள் யாரிடமும் ஒட்டாமல் தனித்து இருந்தால் அது உங்களுக்கு அலுவலகத்தில் பிரச்சனைகளையே தோற்றுவிக்கும்.

நன்றி சொல்லுதல்

வேலைத்தளத்தில் சக ஊழியா்கள் செய்யும் சிறிய சிறிய உதவிகளுக்கும் நன்றி சொல்லப் பழகிக்கொள்ளுங்கள். இது உங்களுக்கும் அவா்களுக்கும் இடையில் சுமூகமான உறவைப் பேண உதவுதோடு, அவா்கள் மென்மேலும் உங்களுக்கு உதவமுன்வர தூண்டுதலாக அமையும்.

மழலைகளின் மனதினிலே – Dr.சி.சிவன்சுதன்

$
0
0

வளரும் குழந்தைகளின் மனதிலே பெரியவர்களும் பெற்றோர்களும் ஒரு சகலகலா வல்லவர்கள் என்ற மனப்பதிவே இருந்து கொண்டிருக்கும். தம்மை எந்தக் கஷ்டத்திலிருந்தும் பாதுகாப்பார்கள், தாம் விரும்புவதை செய்து தருவார்கள், சரியான பாதையிலே நடத்துவார்கள், நிலாவைக் கூடக் கையில் பிடிக்கும் வல்லமை உள்ளவர்கள், அவர்கள் செய்வதெல்லாம் நல்ல விடயங்களாகத்தான் இருக்கும் என்றெல்லாம் நம்பி கொள்வார்கள்.

இவ்வாறான ஒரு நிலையில் இந்தக் குழந்தைகளுக்கு முன்னால் பெரியவர்கள் சின்னத்தனமாக நடந்து கொள்ளும் பொழுதும் கோட்டு தம்மிடையே சண்டை செய்யும் பொழுதும், அழும் பொழுதும், தமது இயலாமையை வெளிப்படுத்தும் பொழுதும், தீய நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுதும் குழந்தைகளின் மன ஓட்டம் குழப்பமடையும்.

இவர்களால் தம்மை பாதுகாக்க முடியுமா என்ற பாதுகாப்பற்ற தன்மை தோன்றும். அந்த சிறிய மனங்களிலே தீய விடயங்கள் ஆழப்பதியும். இது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் ஆளுமை விருத்திக்கும் பெரும் பாதகமாக அமையும். எனவே சிறுவர் முன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயம் பற்றி சிந்திப்பது பயன் தரும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

நீரிழிவு : கேள்வி –பதில்

$
0
0

கேள்வி – நீரிழிவு நோய்க்கு மாத்திரைகளை பாவிக்காது இயற் கையான உணவுக்கட்டுப்பாடு, உடற் பயிற்சிகள் மற்றும் யோகாசன முறைகள் மூலம் கட்டுப்படுத்துவது சிறந்ததல்லவா? அதன் மூலம் மருந்துகளால் ஏற்படும் தாக்கங்களை தவிர்த்துக் கொள்ளலாம் அல்லவா?

பதில் – நீரிழிவுநோய்க்கு மாத்திரைகளால் ஏற்படும்தாக்கங்களிலும் பார்க்க மாத்திரைகள் பாவிக்காமல் விடுவதால் ஏற்படும் நோயின் தாக்கம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்த மாத்திரைகளை நீங்கள் குறிப்பிட்டதுபோல் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பவற்றுடன் சேர்ந்து பாவிப்பதே சிறந்தது. இதன்மூலம் குறைந்த அளவு மாத்திரைகளுடன் நோய் நிலையை பூரணமான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.


மதுவை நோக்கித் தூண்டும் சவால்களை எதிர்கொள்ளல்

$
0
0

பொதுவாக ஒவ்வொரு மனிதருடைய பிரச்சினைகளும் தனித்துவமானவையாகவே இருக்கும். அதுபோல் குடிப்பழக்கத்தை விட்டிருக்கும் அல்லது அதிலிருந்து முற்றாக விடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருடைய சவால்க ளும் தனித்துவம் வாய்ந்தவையே. எனவே ஒவ்வொருவருடைய தனித்துவங்களையும், அவர்களது விருப்பு வெறுப்புக்களையும் பொறுத்தே மதுவை நோக்கிக் கவர்ந்திழுக்கும் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் எனத் தீர் மானிக்கலாம்.

இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, பொருத்த மான வழிமுறைகளை அடையாளங் கண்டு, அவற்றை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கு மது அடிமையுடன் வேலை செய்யும் உளவளத் துணையாளர்கள் உதவி செய்வார்கள். ஆயினும் பின்வரும் சில பொதுவான வழிமுறைக ளைக் கடைப்பிடிப்பதனைப் பற்றிச் சிந்தித்தல் நன்மையானது.

ஒருவருடைய மனஉறுதி மிகவும் பலமடையும் வரை அவர் தன்னுடன் சேர்ந்து குடித்த நண்பர்களைத் தனிப்படவோ அல்லது அவர்களது இடங்களிலோ சந்திப்பதனை நிறுத்திக் கொள்ளலாம்.
அதுபோல் அவர் முன்பு குடித்த இடங்கள், குடிவகைகள் கிடைக்கிண்ற இடங்கள் போன்றவற்றை முடியுமானளவு முயற்சித்துத் தவிர்த்துக் கொள்ளலாம்.
கைகளில் பணம் புழங்குவது ஒரு பிரச்சினையாக இருந்தால், அந்த வேளைகளில் மது அருந்தினால் என்ன? என மனம் அலைபாயுமாக இருந்தால், அந்தப் பணத்தைத் தற்காலிகமாக வீட்டிலுள்ள பொறுப்பான ஒருவரிடம் (மனைவி அல்லது வளர்ந்த பிள்ளை) ஒப்படைக்கலாம்.
மீண்டும் மது அருந்தும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சமூகமயமாதல் நிகழ்வுகளை, குறிப்பாக மது தாராளமாகப் பாவிக்கப் படுகின்ற செத்தவீடு, எட்டுச்செலவு, பூப்புனித நீராட்டு விழா வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற கொண்டாட்டங்களை, ஆரம்பத்திலே சில காலங்களுக்குத் தவிர்த்துக் கொள்ளலாம்.
வேலை நேரம் தவிர்ந்த ஏனைய பொழுதுகளை தமது வீட்டாருடனும், மதுபாவிக்காத நண்பர்களுடனும் செலவழிக்கலாம்.
வாழ்க்கையிலே பிடித்தமான ஒரு விட யத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலே ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடையாக அமைய மாட்டாது. எந்த வயதிலும் எதையும் கற்றுக் கொள்ளலாம். ஆர்வம் மட்டுமே முக்கியமானது.
மதுவிலிருந்து விலகி ஆரம்பிக்கும் புதியதொரு வாழ்க்கைக்கு ஆத்மீக நம்பிக்கைகள் சக்தி கொடுக்கும். அவற்றிலே ஏற்படுகின்ற பரிச்சயமும் ஈடுபாடும் பெரிதும் பயன் மிக்கன.
சாந்த வழிமுறைகளில் ஈடுபடலாம். அவை மெல்ல மெல்ல ஒருவரிடம் இருக்கின்ற வேண்டத்தகாத குணவியல்புகளைக் குறை த்து, நல்ல இயல்புகளை வளர்த்துவிடும் ஆற்றலுடையன.
குடிக்கும் எண்ணத்தை சீற்றத்துடன் வரும் கடல் அலையுடன் ஒப்பிடலாம். அலை நம்மை நோக்கி வரும் போது சமாளிக்க முடியாத வேகத்துடன் வருவது போல் தோன்றினாலும் அது சிறிது நேரத்தில் வலுவிழந்து, சீற்றம் அடங்கிப் பின் சென்றுவிடும்.

நன்றி –

சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்

உங்கள் நிறையும் நீரிழிவும்

$
0
0

நீரிழிவு மற்றும் இருதயநோய்கள் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்க ஆநோக்கியமான ஒருவர் தனது உடல் நிறையை எவ்வாறு பேணவேண்டும் என்பதைக் கீழ்க்காணும் அட்டவணைகாட்டுகின்றது.

வலிப்பு –திருமதி.அஜந்தா கேசவராஜ்

$
0
0

வலிப்பு வியாதி என்றால் என்ன?

வலிப்பானது மூளையின் நரம்புக்கலங்களில் சடுதியாக ஒரேநேரத்தில் ஏற்படும் அதிகரித்த இயக்கத்தின் வெளிப் பாடு ஆகும். வலிப்புவியாதியினால் அவதியுறுபவருக்கு இலகுவில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வலிப்புக்கள் வருவது மட்டுமல்லாது இதன் தாக்கத்தினால் ஞாபகசக்தியின்மை, நுண்ணறிவுகுன்றுதல், உளவியல் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றினாலும் பாதிப் புக்கள் ஏற்படலாம்.

வலிப்புவருவதற்குரிய காரணிகள் எவை?

நிறமூர்த்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் (அரிதானது), மூளையில் ஏற்படும் காயம் அல்லது வடு, காரணிகள் அறியப்படாமை (பொதுவானது),

முதன்முறையாக ஒருவருக்கு வலிப்பு வந்தி ருந்தால் அவரை எவ்வாறு அணுகி ஆராய வேண்டும்?

  1. அந்த வலிப்புவர ஏதுவாக இருக்கக்கூடிய காரணிகள் பற்றி ஆராய வேண்டும். காய்ச்சல் (குறிப்பாக சிறு பிள்ளைகளிற்கு 1-6 வயதுவரை), நித்திரையின்மை, உரிய நேரத்தில் உணவு உண்ணாமை,
  2. வலிப்பு எவ்வாறு தொடங்கி-எவ்வாறு முடிகின்றது என்பது பற்றி ஆராயவேண்டும்.
    1. ஆரம்பவலிப்பின் அறிகுறிகள் (aura)
      • கைகள்/கால்கள் இறுக்கமடைதல்
      • தலை/கண்கள் ஒருதிசையை நோக்கித் திரும்பிச் செல்லுதல்
      • கைகள்/கால்கள் உதறுதல்
      • வெறுமனே ஒர் இடத்தை பார்த்தல்
      • வேறுபட்டு கதைத்தல்
      • செய்யும் செயல்களில் தடைஏற்படுதல்
      • வாயைச்சப்புதல்
      • கைகளால் ஆடைகளைப் பிசைதல்
      • மூக்கைத் துடைத்தல்
      • காரணமின்றி நடந்து திரிதல்
    2. வலிப்பின் போதுகவனிக்கவேண்டியவைகள்
      • அறிவிழத்தல்
      • கைகள்/கால்கள் இரண்டும் உதறல் எடுத்தல்
    3.  வலிப்பின் பின்னால் இடம்பெறும் நிகழ்வுகள் பற்றி அறிதல்
      • மயக்கமடைந்தநிலையில் இருத்தல்
      • வாந்திஎடுத்தல்
      • தலையிடி
      • கதைப்பதில் தடுமாற்றம் /பேச்சு அற்று இருத்தல்
      • உடலின் ஒருபகுதிசெயலற்று இருத்தல்

சிறுவயதில் குறிப்பாக 1-8 வயதினருக்கு வரும் காய்ச்சலுடனான வலிப்பு பாரதுரமானதா?

இல்லை.இதைக் காய்ச்சல் வலிப்பு என்றே கூறுவோம். இது அநேகமாக 6 வயதிற்கு பின் ஏற்படமாட்டாது. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதனைமுழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

வலிப்புநோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட வர்களது உடல் அமைப்பில் காணப்படும் நோயின் அறிகுறிகள் எவை?

  • தலையின் சுற்றளவு சிறிதாக இருக்கலாம்.
  • தோலின் கீழ் கட்டிகள் தென்படலாம் அல்லது தோல் வெளிறிக் காணப்படும்.
  • கண்கள்/காதுகளில் குறைபாடுகள் இருக்கலாம்.
  • முகத்தின் அமைப்பில் மாற்றம் இருக்கலாம்

வைத்தியருக்கு நோய் பற்றி அறிவிக்க நோயாள ரின் பாதுகாவலரான நீங்கள் எவ்வாறு உதவி புரிய வேண்டும்?

  1. கேள்வி இல. 3 இன் விடயங்களை கவனமாக உற்றுநோக்கி வைத்தியரிடம் தெரிவிக்கலாம்.
  2. வலிப்பை அதன் ஆரம்ப நிகழ்வில் இருந்து முடியும் வரை தொலைபேசிகாணொலியில் பதிந்துவைத்தியரிடம் காட்டலாம்.
  3. வலிப்புநோய் அடிக்கடி வருமாயின் உடனடியாக மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள வைத்திய சாலைக்கு எடுத்துவரலாம்.

சிறு பிள்ளைகளிற்கு வலிப்பு ஏற்படின் எவ்வகை யான முக்கிய தகவல்களை வைத்தியரிடம் தெரிவிக்கவேண்டும்?

  1. கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்டநோய்கள்
  2. தலையில் அடிபடுதலும் அதன் தொடர்ச்சியானதுமானவிடயங்கள்
    1. மயக்கமடைதல்
    2. வாந்தி எடுத்தல்
    3. வலிப்பு
    4. ஞாபகசக்தியின்மை
  3. குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களின் வலிப்புநோய் பற்றிய தகவல்கள்.
  4. குழந்தைகளின் வளர்ச்சிப் படிகளில் காணப்படும் ஏதாவதுபின்னடை வகள்.
  5. தோலில் ஏற்படும் மாற்றங்கள் (தோலில் கட்டிகள் ஏற்படுதல்/ தோலின் நிறம் குன்றுதல்)

வலிப்பு நோயாளிக்கு அடிக்கடி வலிப்பு வருமாயின் என்ன காரணங்களை இனங்காணுதல் முக்கியமானது?

  1. முன்னர் இனங்காணப் பட்டவலிப்பு நோயின் வகை தவறானதாக இருக்கலாம்.
  2. இதுஒருபோலியானவலிப்பாக இருக்கலாம்.
  3. உடல் அனுசேபத்துடன் தொடர்பான நோயாகவும் இருக்கலாம்.
  4. வலிப்பு மாத்திரைகள் செயலிழந்திருக்கலாம்.
  5. தகாத மருந்து வழங்கப்பட்டிருக்கலாம்.

எனது பிள்ளைகளுக்கு காக்கை வலிப்பு இருந்தால் என்ன செய்வது?

காக்கை வலிப்பிற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட குணங் குறிகள் இருக்குமாயின் உடனடியாக தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை பெறுதல் இன்றிய மையாதது.

ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு விட்டால் எவ்வாறு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்?

  1. வலிப்பு வந்தமைக்கான காரணிகளை ஆராய வேண்டும்.
  2. வலிப்பானது 30 நிமிடங்கள் வரைநீடிக்குமாயின் வலிப்பிற்கான மருந்துகளை உபயோகிக்க வேண்டி ஏற்படலாம்.
  3. தலைப்படம், தலைப்பட்டி என்பன தேவைப்படின் எடுக்க வேண்டி ஏற்படும்.

ஒருமுறை ஏற்பட்ட வலிப்பு மீண்டும் ஏற்படுமா என்பதை எவ்வாறு இனங்காணலாம்?

இதன் போது சோதிக்கப்படும் தலைப்பட்டி அல்லது தலைப்படம் என்பவை சாதாரணமானவையாயின் அந்நோயாளிக்கு மீண்டும் வலிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் ஏறத்தாழ 70% ஆக இருக்கலாம்.

காக்கை வலிப்பை முற்றாககுணப்படுத்த முடியுமா?

வேறுபட்ட மருந்து மாத்திரைகளால் 75% மான வலிப்பு நோயாளிகளிற்கும் சத்திர சிகிச்சை மற்றும் விசேட தூண்டல் முறைகள் மூலம் மேலும் 10% மான நோயாளிகளுக்கும் வலிப்பினை குணப்படுத்த முடியும். இதன்படி பார்க்கையில் ஒட்டுமொத்தமாக 85-90% மான நோயைக் குணப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.

எல்லா வலிப்புக்களிற்கும் மருத்துவ சிகிச்சை அவசியமானதா?

இல்லை பின்வரும் வலிப்பு வகைகளிற்கு பொதுவாக மருந்து மாத்திரைகள் தேவையில்லை

  • காய்ச்சலுடனான வலிப்பு
  • நீண்டகாலத்திற்கு ஒருமுறை ஏற்படும் வலிப்பு

காக்கை வலிப்புள்ள பிள்ளைகள் சாதாரண பிள்ளை களைப் போன்று கல்வி கற்க முடியுமா?

ஆம்,இவர்கள் சாதாரண பிள்ளைகளைப் போன்று விளையாடவும் கல்வி கற்கவும் முடியும். இவர்களை சாதாரண பிள்ளைகளைப் போன்று எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விளையாட்டிலும் கல்வியிலும் ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

வலிப்பு வியாதியினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதிக கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமா?

இல்லை. அளவுக்கு அதிகமாக இப் பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டால் இவர்களின் மனவளர்ச்சி குன்றிவிடும். இவர்களினால் சாதாரண வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் போய்விடும். இந்நிலைக்கு காக்கை வலிப்பு நேரடிக்காரணமாகாது.

இந் நோயை பேய், பிசாசு விரட்டுதல், மாந்திரீகம் பார்த்தல் போன்ற முறைகள் மூலம் குணப்படுத்த
முடியுமா?

இவை விஞ்ஞான ரீதியான சிகிச்சை முறைகள் அல்ல.

வகுப்பறையில் மாணவன் ஒருவனுக்கு வலிப்பு வந்தால் என்ன செய்யவேண்டும்?

  1. காயம் ஏற்படாதவாறு அருகில் இருக்கும் கதிரை மேசைகளை விலக்கிவிட வேண்டும்.
  2. நோயாளியை ஒருபக்கமாக படுக்கவைக்க வேண்டும்.
  3. ஏனைய மாணவர்கள் வலிப்புடையவருடன் நிற்பதை தடுக்க வேண்டும்.
  4. வலிப்பு நீண்டநேரத்திற்கு நீடிக்குமாயின் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டும்.

காக்கை வலிப்புடைய பிள்ளையை பாடசாலையில் வைத்திருப்பது ஆபத்தானதா?

வீட்டிலும் சரி பாடசாலையிலும் சரி எதிர்பாராதசந்தர்ப்பங்களிலேயே ஏற்படுகின்றது. பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களின் கல்வி பாதிப்படைகின்றது. ஆசிரியர்கள் பிள்ளையை பூரணமாக குணமாக்கிய பின்புதான் பாடசாலை அனுப்பும் படி பெற்றோரிடம் வலியுறுத்து வதை தடுக்கவேண்டும்.

காக்கை வலிப்புள்ள மாணவனை பாடசாலைக்கு அனுப்ப முன் பெற்றோராகிய நீங்கள் என்ன அறிந் திருத்தல் அவசியம்?

  1. வலிப்பு நோய்க்குரிய மருந்தினை வைத்திய ஆலோசனைப் படி நேரத்திற்கு பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்
  2. நேரம் தவறாது நிறையுணவு வகைகளை பிள்ளைகளுக்கு வழங்குதல் வேண்டும்.
  3. பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
  4. வகுப்பாசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் இது பற்றி தெரிவிக்க வேண்டும்.
  5. நீச்சல் அடித்தல் மற்றும் மரம் ஏறுதல் தவிர்ந்த ஏனைய விளையாட்டுக்களில் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும்.
  6. பிள்ளைகளை குறைந்தது 6 மணித்தியாலங் களாவது உறங்கவிட வேண்டும்.

காக்கை வலிப்புடைய திருமணவயதினருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்பு கிறீர்கள்?

அவர்கள் சந்தோசமான திருப்திகரமான திருமண வாழ்க்கையை வாழலாம். இதற்கு வலிப்பு ஒரு தடை அல்ல. அத்துடன் சாதாரண தம்பதிகள் போல் பிள்ளை களையும் பெறலாம். ஆனால் குறிப்பாக பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு முன் இது சம்பந்தமாக வைத்திய ஆலோசனை ஒன்றை பெற்றிருத்தல் இன்றியமையாதது.

வலிப்பு நோய் உடையவர்கள் கர்ப்பம் தரிப்பது பற்றி உங்கள் ஆலோசனைகள் என்ன?

  1. இவர்கள் கர்ப்பம் தரிக்க எந்தவித தடையும் இல்லை. ஆனால் கருத்தரிக்க முன் வைத்தியரின் ஆலோசனை ஒன்றை பெற்றிருத்தல் இன்றியமையாதது.
  2. எதிர்பாராதவிதமாக கருத்தரித்திருந்தால் மருந்தை நிறுத்தாமல் கூடிய விரைவில் வைத்திய ஆலோசனையை பெறுங்கள்.
  3. நீங்கள் மகப்பேற்று மருத்துவரை முதலில் சந்திக்கும் போது உங்களுக்கு வலிப்பு வியாதி இருப்பதைப் பற்றி தெரிவியுங்கள்.
  4. கர்ப்பம் தரிக்க முன்பு இருந்தே போலிக்அசிட் எனப்படும் விற்றமின்களை எடுக்க வேண்டும்.
  5. ஒழுங்கான உணவுப் பழக்கங்களும், ஓரளவு உறக்கமும் இக்காலத்தில் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

வலிப்பு நோய் உடையவர்கள் தொழில் பார்ப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் எவை?

சாதாரண தொழிலாளர் போல் இவர்கள் வேலை பார்க்கலாம். ஆனால் நீங்கள் வேலையைத் தெரியும் முன் பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்

  1. வலிப்பு ஓரளவுக்கேனும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.
  2. பின்வரும் சந்தர்ப்பங்களை தவிர்த்தல் வேண்டும்
    • ஆபத்தான இயந்திரங்களுடனான வேலை
    • நெருப்புடனான வேலை
    • உயரமான இடத்தில் இருந்து செய்யும் வேலை
    • இரவு நேர வேலைகள்

வலிப்பினை இனங்காணும் பொழுது எவ்வாறான முதலுதவிகளை வழங்கலாம்?

வலிப்பு ஏற்படுகின்ற பொழுது உடலிலுள்ள தசைகள் இறுக்கமடையும் அதேவேளையில் குரல்வளை யிலுள்ள தசைகளும் இறுக்கம் அடைகின்றன. இதன் பொழுது தற்காலிகமான மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் வலிப்பு அசாதாரணமாக நீண்ட நேரத்திற்கு நீடிக்குமாயின் இறப்பும் நிகழலாம். எனவே நோயாளி உபாதைக்கு உட்பட்டிருக்கும் நேரத்தில் உரிய முதலுதவிச் சிகிச்சையளிப்பது இன்றியமையாதது.

  1.  முதலுதவி வழங்குபவர் பதற்றம் அடையாது இருத்தல் வேண்டும்
  2. வலிப்பு நோயாளியின் சுற்றுப் புறத்திலுள்ள நோயாளிக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட் களை அகற்ற வேண்டும்
  3. நோயாளிக்கு வலிப்பு ஆரம்பித்த நேரத்தினை குறித்துக் கொள்ள வேண்டும்
  4. நோயாளிக்கு வலிப்பு நோய் முற்று முழுதாக நிற்கும்வரை நோயாளியுடன் இருத்தல்வேண்டும்
  5. வலிப்பின் பொழுது தலை அடிபடுதலை தலையனை ஒன்றைப் பயன்படுத்தி தவிர்த்துக் கொள்ள முடியும்.
  6. எக்காரணம் கொண்டும் உடலில் அல்லது கை கால்களில் ஏற்படும் வலிப்பின் போதான உதறல் களை நிறுத்த முற்படக் கூடாது.
  7. வலிப்பின் பொழுது நோயாளியின் வாய்க்குள் திண்ம அல்லது திரவப் பதார்த்தங்களை விடு வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  8. மீண்டும் ஒருமுறை வலிப்புநீடிக்கும் நேரத்தை அவதானிக்கவும்.
  9. வலிப்பு 5 நிமிடங்களை விடக் கூடிய நேரம் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியசாலையின் அவசரப் பிரிவிற்கு நோயாளியை அனுமதிப்பது அவசியம்.
  10. கைகால் உதறல்கள் குறையுமிடத்து நோயாளியை இடது அல்லது வலது புறமாக பாதி திரும்பிய நிலையில் வைத்து சீரான சுவாசம் ஏற்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இதன் பொழுது சுவாசக் குழாயினுடைய தொழிற்பாட்டை திண்ம உணவுப் பதார்த்தங் கள், கட்டுப்பற்கள் அல்லது அது போன்ற வேறு ஏதேனும் பொருட்கள் இடையூறு விளைவிக்கின்றதா என வாய்க்குளிக்குள்சோதித்தல் வேண்டும்.
  11. சுவாச வீதமானது ஏதாவது காரணத்தினால் குறைவடையும் போது உடனடியாக வைத்திய உதவியை நாடுதல் அவசியம்.

வலிப்பு நோயாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்க முறைகள் யாவை?

இதெற்கென பிரத்தியேகமான உணவு முறைகள் எதுவுமில்லை. இருப்பினும் வயதிற்கேற்ற வகையில் நேரந்தவறாது உணவு உட்கொள்ளுதல் இன்றியமையாதது ஆகும்.

“காக்கைவலிப்பு உங்கள் வாழ்க்கையை இருள் மயமாக்காது தைரியத்துடனும் விவேகத்துடனும் அதற்கு முகங்கொடுங்கள்”

திருமதி.அஜந்தா கேசவராஜ்
விசேட நரம்பியல் நிபுனர்.

கடவுளிடம் எதை வேண்டுவது? – Dr.சி.சிவன்சுதன்

$
0
0

கஷ்டங்கள் வரும் பொழுது கடவுளின் ஞாபகம் சேர்ந்து வருகிறது.கவலைகளும் கஷ்டங்களும் தொடர்ந்தால் கடவுளிடம் மனமுருகி வேண்டியவையும் கிடையாது போனால் கோபம் கூட வருகிறது.

கேட்டும் கிடைக்காத போது கடவுள் நம்பிக்கையும் கேள்விக்குறி ஆகிவிடுகிறது. கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கும் எம்மைக் காப்பதற்கும் மட்டும் தான் கடவுள் இருக்கிறராசரி கேட்பவற்றை எல்லாம் கொடுக்கும் கடவுள் இருக்கிறாரா?சரி கேட்பவற்றை எல்லாம் கொடுக்கும் கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.நாம் எல்லாவற்றையும் கேட்க முயலுவோம். எமக்கு எல்லாமே கிடைக்குமானால் இன்னொருவனுக்கு ஒன்றுமே கிடைக்காமல் போகும்.

இது நியாயமாகுமா? இதையும் மீறி எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடின் பூவுலகம் எவ்வாறு இயங்க முடியும். இன்றின் இழப்பிலே இன்னொன்று கிடைப்பதும் தோல்விகளும் வெற்றிகளும் மாறிமாறி ஏற்படுவதும் எதிர்பார்ப்பவற்றில் சில கிடைக்காமல் போவதும் எதிர்பாராமலேயே சில கிடைக்கப்பெறுவதும் சர்வ நிச்சயமானது.

கடவுளிடம் எம்மை சரியான பாதையில் வழிநடத்துமாறு கேட்போம்.எமது மனோபலத்தையும் எதையும் தாங்கி சமாளிக்கும் மன உறுதியையும் வளர்த்து விடக் கேட்போம். எமது சந்தோசங்களையும் முன்னேற்றங்களையும் கடவுளிடம் பகிர்ந்து கொள்வோம். எமது கவலைகளையும் பிரச்சினைகளையும் அவரிடம் முறையிட்டு ஆறுதலும் தெளிவும் பெறுவோம்.

எல்லாம் வல்ல இறைவன் உலகை சரியான பாதையில் வழி நடத்துவார்.

Dr.சி.சிவன்சுதன்

பொது வைத்திய நிபுனர்

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்”– Dr.P.மயூரதன்

$
0
0

இன்று உலகளாவிய ரீதியில் உடற் பருமன் அதிகரிப்பு. உயர் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமிருக்கின்றன. இவ்வாறு ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு தொற்றா நோய்களின் (non communicable disease) பாதிப்புள்ளானவர்கள் இருதய மற்றும் பலவகையான நோய்த் தாக்கங்களால் இலகுவில் பாதிக்கப்படும் அபாயநிலை உருவாகலாம்.

எனவே மேற்குறிப்பிட்ட பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதன் மூலமே ஒருவர் சுகதேகியாக வாழ முடியும். புகைத்தல் மற்றும் மதுசாரம் அருந்துதல் என்பனவும் உயிர்கொல்லி நோய்களை உருவாக்கும்.

ஒருவர் எவ்வாறு தனது உடற்பருமனை சாதாரண அளவில் பேணலாம்?

  •  உண்மையில் உடற்பருமனானது உடற்திணிவுச் சுட்டெண் (Body Mass Index — BMI) என்னும் அலகினாலேயே அளக்கப்படுகின்றது.
  • ஒவ்வொரு மனிதனும் சரியான அளவில் தனது உடற்திணிவுச் சுட்டெண்ணை (BMI) பேணுவதன் மூலம் உடற்பருமனை சாதாரண அளவில் பேணிக் கொள்ளலாம்.
  • அவ்வாறாயின் ஒவ்வொருவரும் உடற்திணிவுச் சுட்டெண் பற்றியும் உணவுப் பழக்கங்கள் பற்றியும் உடற்பயிற்சிகள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகும்.
  •  ஆரோக்கியமான உணவுப்பழக்கவழங்களும் உடற்பயிற்சிகளுமே ஒருவரது உடற்பருமனை பேணுவத ற்கு அடிப்படையான காரணிகளாகும்.அத்துடன் புகைத்தல் மற்றும் மது அருந்துதலை முற்றாக நிறுத்தவேண்டும்

உடற்திணிவுச் சுட்டெண் (Body Mass Index — BMI) என்றால் என்ன ?

  •  BMI ஆனது ஒருவரது உடல் நிறையையும் உயரத்தையும் அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு கணிக்கப்படுகிறது.


BMI பற்றிய சாதாரண அளவுகள் என்ன ?

  •  ஆசியாக் கண்டத்தில் வசிக்கும் மக்களின் BMI ஆனது எவ்வளவாகப் பேணப்பட வேண்டும் என்பவை பற்றி பின்வருமாறு கூறுகின்றது.
  •  BMI ஆனது 18.4 kg/m2 க்கு குறைவாக இருந்தால் அவர் குறைவான உடற்பருமன் உடையவராக (under weight) கருதப்படுவார்.
  • அதே சமயம் BMI ஆனது 18.5kg/m2 தொடக்கம் 23 kg/m2 வரையானவர்கள் சாதாரண உடற்பருமனை உடையவர்களாக கருதப்படுவர்.
  • ஆனால் BMI ஆனது 23kg/m2 தொடக்கம் 27.5kg/m2 க்கு வரையானவர்கள் அதிக உடற்பருமனை உடையவர்களாகவும் (Over Weight) 27.5 kg/m2 மேற்பட்டவர்கள் அதிகளவு உடற்பருமனை உடையவர் களாகவும் (obese) கருதப்படுவர்.
  •  எனவே ஒவ்வொருவரும் தனது BMI ஐ கணக்கிட்டு அதை 18.5 kg/m2 இல் இருந்து 23 kg/m2 வரையில் பேணிக் கொள்வது அத்தியாவசியமாகின்றது.

BMI ஆனது 18.5 kg/m2 இல்குறைவாக (under weight) இருந்தால் எவ்வகையான பாதிப்புக்கள் ஏற்படும்?

  • இவர்கள் உடற்பருமன் குறைந்தவர்கள் (under weight) என அழைக்கப்படும்.
  • இவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்திகுறைவாக இருக்கலாம். இதனால் அடிக்கடிகிருமித்தொற்றுக்கு உள்ளாகநேரிடும்.
  • இவர்களுக்கு குருதிச்சோகை நோய் (anemia) ஏற்படலாம். எனவே அதிக களைப்பு, மறதி, வினைத்திற னுடன் வேலை செய்ய முடியாமை போன்ற பிரச்சினை களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
  • மற்றும் எண்புருக்கி (osteoporosis) நோய் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்படலாம். இதனால் மூட்டு நோ, உடல் நோ, முறிவு போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

BMI ஆனது 23 kg /m2 இலும் அதிகமாக (over weight /obesity) இருந்தால் எவ்வகையான பாதிப்புக்கள் உருவாகும்?

  • இவர்களே பல வகையான தொற்றா நோய்களால் (non communicable disease) பாதிக்கப்படும் அபாயமுடையவர்கள்.
  • உயர் குருதி அமுக்கம்,நீரிழிவு, மாரடைப்பு. அதிக கொலஸ்ரோல், பாரிச வாதம் போன்ற ஆட்கொல்லி நோய்களின் தாக்கங்கள் இவர்களை இலகுவாக ஆட்கொள்ளும்.
  • முற்றும் சாதாரண சுவாசத்தில் பிரச்சினைகள் கருக் கட்டல்/குழந்தை பிறத்தலில் பிரச்சினைகள் சிறுநீரக நோய்கள் மூட்டுவாதங்கள் மற்றும் சில வகையான புற்று நோய்களாலும் இலகுவில் பாதிக்கப்படும் நிலை உருவாகக்கூடும்.

ஒருவரின் உடல் நிறையை எப்போது பராமரிக்க தொடங்க வேண்டும்?

  • உடல்நிறையைபராமரிப்பதானது. ஒருவர் தனது தாயின் கருவறையில் உருவாகியதிலிருந்து ஆரம்பமாகின்றது.
  • கர்ப்பிணித் தாய் ஒவ்வொரு மாதமும் தன் நிறையை அளந்து கொள்வதோடு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
  • குழந்தையின் நிறையானது சாதாரண அளவில் இருக்க வேண்டும்.குழந்தை நிறை குறைந்து இருப்பின் அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது உயர் குருதியமுக்கம் மற்றும் இதயநோய்களுக்கு உள்ளாக நேரிடலாம்.அதே போல் குழந்தை நிறை கூடுதலாக இருப்பின் அவர்கள் அவர் கள் எதிர்காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்.
  • குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் ஊட்டப்பட வேண்டும். 5, 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அதேபோல் இரண்டு வருடங்களின் பின் தாய்ப்பால் கொடுப்பதும் நல்லதன்று.
  • ஒவ்வொரு மாதமும் குழந்தையின் நிறை அளக்கப்பட்டு நிறை சம்பந்தமான வரைபில் வரையப்பட வேண்டும். குழந்தையின் நிறையை சாதாரண அளவில் பேணுவது பெற்றோரின் பொறுப்பாகும்.
  • குழந்தைகளுக்கான உணவு தெரிவு செய்யும் போது கூட அது நிறை உணவாகவும் கொழுப்பு மற்றும் உப்பு குறைந்ததாகவும் இலகுவில் சமிபாடடையக் கூடிய தாகவும் தெரிவு செய்ய வேண்டும். இவை நாளாந்தம் நாம் உண்ணும் சாதாரண உணவுகளை கொண்டு அமைக் கப்படுவதுடன் அதிகளவில் புரதம் மற்றும் பழங்கள் மரக்கறிகள் அடங்கியதாக இருத்தல் சிறந்ததாகும்.
  • குறைந்தது ஒரு வயது வரை குழந்தைகளுக்கு டொபி சொக்லட் மற்றும் உப்பு போன்ற உணவுகள் சேர்க்கப்படுதலை முற்றாக தடுத்தல் நன்று.
  • பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கும் 3 வேளைகளும் உணவு வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு நிறை உணவு பற்றிய அறிவுரைகளை வழங்குவதுடன் அவர்கள் பாடசாலைக்கு கொண்டு வரும் உணவுகளை கண்காணிப்பதும் அவர்கள் சரியான உணவுகளை உட் கொள்வதை உறுதிசெய்வதும் ஆசிரியர்களின்கடமையாகும்.
  • அவர்கள் வளர்ந்த பின் தமது உணவை ஆரோக்கியமாக அமைத்து கொள்வது தமது பொறுப்பாகின்றது. இதன் மூலம் எமது உடல்நிறையை நாம் பேணிக் கொள்ளலாம்.

நாம் எவ்வாறான உடற்பயிற்சிகளை செய்வது சிறந்தது?

  •  உடற்பயிற்சியானது சிறுவயது முதல் தொடர்ச்சியாக செய்தல் சிறந்ததாகும்.
  • பாடசாலைப் பருவத்தில் மாணவர்களை புத்தகப் படிப்புடன் மட்டுமல்லாது உடற்பயிற்சிகளிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபடச் செய்வது ஆசிரியர்களின் கடமையாகும்.
  • வளர்ந்தவர்கள் தமது உடற்பயிற்சியை தாமாகவே தெரிவு செய்ய வேண்டும். இவை உடலை வருத்தி கஷடப்பட்டு செய்யப்படுபவை அல்ல. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் நடத்தல், ஓடுதல், சைக்கிள் ஓடுதல் என்பனவும் உடற்பயிற்சியின் அங்கங்களாகும். சாதாரணமான ஒருவர் வாரத்தில் 5 நாட்களாவது இவ் வாறான உடற்பயிற்சிகளை செய்வது நன்று. ஒரு நாளில் குறைந்தது 30 நிமிடங்கள் நடந்தால்போதுமானது.ஆனால் நடக்கும் போது அவருக்கு சற்று வியர்க்கும் வகையிலும் அவரது இதயத்துடிப்பு 100 நிமிடம்வரை அதிகரிக்கும்வகையிலும் சற்று விரைவாக நடக்க வேண்டும். இது சாதாரண மாக 3.6km துாரத்தை 30 நிமிடத்தல் நடத்தலாகும்
  • அதே சமயம் BMI ஆனது 30 kg/m2 இலும் அதிகமானவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது மேற்குறிப்பிட்டவாறு நடத்தல் அவசியமானதாகும்.
  • மேலும்நாம் அன்றாட வாழ்க்கையின்போதும் நமது நடவடிக்கைகளை உடற்பயிற்சியுடன் தொடர்புடையதாக அமைத்துக் கொள்வது நல்லது.
    • உதாரணமாக அருகிலுள்ள கடைகளுக்கு செல்லும் போது நடந்து செல்லுதல்.
    • வேலை செல்பவர்கள் பஸ்சில் செல்பவராயின் சற்றுத் தூரம் நடந்து சென்று தொலைவிலுள்ள பஸ் தரிப்பிடத் திலிருந்து பஸ்சை பெறலாம். இறங்கும்போது சற்று தொலைவில் இறங்கி நடந்து செல்லலாம்.
    • அலுவலகங்களில் உள்ள இருக்கைகளை முடிந்தளவு இடைவெளி கூடியதாக அமைத்துக் கொண்டால் இன்னும் ஒருவருடன் தொடர்பு கொள்கையில் எழுந்து நடக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.
    • வார இறுதி நாட்களில் தோட்டவேலை வீட்டை சுத்தம் செய்யும் வேலைகளை தாமே செய்யலாம்.
    • ஓய்வு நேரங்களின் போதும் உல்லாசப்பயணங் களின் போதும் சிறிதளவேனும் நடக்கக் கூடிய வகையில் உங்களது நேர அட்டவணையை தயார் செய்து கொள்வது சிறந்தது.

Dr.P.மயூரதன்

இரட்டிப்பு பயம் – Dr.சி.சிவன்சுதன்

$
0
0

பயப்பட வேண்டிய விடயங்களுக்கு பயம் இன்றி இருந்து கொள்வது பயம், ஆபத்தானது என்றும் அதே சமயம் பயம் கொள்ளத் தேவையற்ற விடயங்களுக்கு பயந்துகொண்டே இருப்பதும் பயம் என்றும் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் அன்றாட வாழ்வில் பயம் கொள்ளத் தேவையற்ற பலவற்றிற்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பால் குடிக்க பயம், தயிர் சாப்பிடப்பயம், தவசி முருங்கை சாப்பிடப்பயம், இரவிலே இலைவகை உள்ள உணவுகள் உண்ண பயம், சில உயிர்க்காப்பு மருந்துகளை உள்ளெடுக்க பயம், இறால் சாப்பிடப்பயம், அகத்தி மரத்தை வீட்டில் வளர்க்க பயம், முட்டை சாப்பிட பயம், முட்டு வருத்தத்தால் கஷ்டப்படினும் பம் பாவிக்க பயம் இவ்வாறாக பயப்படத்தேவை அற்ற பலவற்றிக்கு நாம் பயந்து பயந்து வாழ்வதன் காரணம் என்ன? அதே வேளை பயப்பட வேண்டிய பலவற்றிக்கு பயம் இன்றி வாழ்ந்து பல ஆபத்துக்களை தேடிக் கொள்கிறோமே? இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

உடல் பருத்திருந்தும் உல்லாசமாய் உலாவி வருகிறோம். சந்தோசமாக சோடா குடிக்கிறோம். எதுவித பயமுமின்றி உடற்பயிற்சி செய்யாதிருக்கிறோம். உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று விளக்கமும் கொடுக்கின்றோம். தினமும் தொலைக்காட்சிக்கு முன்னால் மணிக்கணக்காக உட்கார்ந்து இருந்து மகிழ்கிறோம். இரசாயனம் சேர்க்கப்பட்ட மென்பானங்களை அருந்துவதில் பெருமை கொள்கிறோம். சினிமா கதாநாயகர்கள் பாணியில் குடித்து புகைத்து கும்மாளம் அடித்து கதா நாயகர்களாய் உலா வருகிறோம். வாகனம் ஒடுவதில் “திறமையை” காட்ட முயல்கிறோம். இவ்வாறாக பயம் கொள்ள வேண்டிய பல விடயங்களை பயமின்றிச் செய்யத் துணிந்ததன் காரணம் என்ன?

இந்த இரட்டிப்பு ஆபத்திலிருந்து மீள்வது எப்படி?

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

ஈழத்தின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

$
0
0

ஈழத்தின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (பி. ஜனவரி 25, 1941) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

தனது 75 வயதில் யாழ்ப்பாணம் பாரீர் எனும் நூலை படைத்தார் இதுவே இவரது இறுதி படைப்பாகும்

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகவும் கடமை புரிந்தார்

பிறப்பும் கல்வியும்

இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழதையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

இவருடைய ஆக்கங்கள்

தொடர் கதை தொகு.
ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த ‘கிடுகு வேலி’ என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

திரைப்படம்
இவர் எழுதிய ‘வாடைக் காற்று’ புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.

நந்திக்கடல்
சித்திரா பௌர்ணமி
ஆச்சி பயணம் போகிறாள்
முற்றத்து ஒற்றைப் பனை
வாடைக்காற்று
காட்டாறு
இரவின் முடிவு
ஜன்ம பூமி
கந்தவேள் கோட்டம்
கடற்கோட்டை
சிறுவர் புதினங்கள் தொகு
பூதத்தீவுப் புதிர்கள்
ஆறுகால்மடம்
வரலாற்று நூல்கள் தொகு
யாழ்ப்பாண அரச பரம்பரை
நல்லை நகர் நூல்
மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
ஆய்வு நூல்கள் தொகு
ஈழத்துச் சிறுகதை வரலாறு
தொகுப்புக்கள் தொகு
மல்லிகைச் சிறுகதைகள் – 1
மல்லிகைச் சிறுகதைகள் – 2
சுதந்திரன் சிறுகதைகள்
மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
ஈழகேசரிச் சிறுகதைகள்
முனியப்பதாசன் கதைகள்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்


உயர்குருதியமுக்கம்

$
0
0

உயர்குருதியமுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விவரணத் தொகுப்பு

ஆக்கம் :
23ஆம் அணி – யாழ் மருத்துவபீட மாணவர்கள்
வைத்திய நிபுணர் சி,சிவன்சுதன் M.D
அவர்களின் வழிகாட்டல்

ஆரோக்கிய நிறை உணவுப்பழக்கம் (Balanced Diet) என்றால் என்ன? – Dr.P.மயூரதன்

$
0
0
  • எமது அன்றாட உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ச்சத்துக்கள், விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கியுள்ளன. இவற்றை சரியான அளவுகளிலும் நல்ல தரமானதுமாக உணன்பதே ஆரோக்கியமான உணவுப்பழக்கமாகும்.
  • உதாரணமாக எமது உணவில் மாப்பொருள் 50-55% மும் புரதம் 15-20% மும் கொழுப்பு 30% மும் இருக்க வேண்டும். அத்துடன் நார்ச்சத்துக்கள் விற்ற மின்கள் மற்றும் கணிப்புக்கள் என்பனவும் தேவையான அளவுகளில் அன்றாடம் உள்ளடக்கப்பட வேண்டும்.
  • மாப்பொருளானது எளிய வெல்லங்களாக இல்லாமல் (உதாரணம் குளுக்கோஸ்) சிக்கலான சேர்வைகளாக இருக்க வேண்டும். எனவே தவிடு நீக்காத புழுங்கல் அரிசி, தவிட்டுப்பாணன், தவிடு நீக்காத அரிசிமா, குரக்கன் மா, ஆட்டாமா போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட உணவே சிறந்ததாகும்.
    குளுக்கோஸ், தேன், பழப்பாகு (jam), அதிகம் இனிப்புள்ள உணவுகள் மற்றும் சொக்லட் போன்ற மாப் பொருள் அதிகமுள்ள உணவு வகைகளை இயன்றவரை குறைத்துக் கொள்வது நல்லது. (முற்றாக உணவிலிருந்து நீக்கத் தேவையில்லை)
  • முட்டை வெண்கரு, மீன், அவரை,சோயா, பருப்பு, நெத்தலிக் கருவாடு, இறைச்சி வகைகள், கொழுப்பு நீக்கிய பால் என்பன அதிகளவில் புரதச்சத்து நிறைந்த உணவாகும்.
    இவ்வாறான உணவுகளை உடற்பருமன் குறைந்த வர்கள் அதிகமான அளவில் உட்கொள்ளலாம். மற்றவர்கள் புரதமானது உணவில் 0.8g/kg உடல்நிறைக்கு என்னும் அளவில் நாளாந்தம் உட்கொள்வது சிறந்தது.
  • கட்டமைப்பின் அடிப்படையில் கொழுப்பானது நிரம்பல் அடைந்த கொழுப்பு (saturated fat) நிரம் பலடையாத கொழுப்பு (unsaturated fat) என இரு வகைகளில் காணப்படுகின்றது.
  • நிரம் பலடையாத கொழுப்பே உடலுக்கு உகந்ததாகும். சோயாஅவரை நல்லெண்ணெய் கடல் மீன்களில் காணப்படும் கொழுப்பு ஒலிவ் எண்ணெய், சூரியகாந்திஎணணெய், சோயா எண்ணெய், கோர்ண் எண்ணெய் போன்றவை நிரம்பலடையாத கொழுப்பை கொண்டிருப்பதால் அவை உடலுக்கு நன்மை தரும்.
  • ஆனால் நண்டு, கணவாய், மிருக இறைச்சி வகைகள், பட்டர் (butter), சீஸ் (cheese), நெய் போன்ற உணவுகளில் கொலஸ்ரோல் அதிகளவில் காணப் படுவதால் இவ்வுணவுகளை குறைத்து கொள்வது உசிதமாகும். இறைச்சி வகைகளில் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியானது கொலஸ்ரோல் குறைந்த உணவாகும்.
  • பச்சை இலை வகைகள், மரக்கறிகள் மற்றும் பழங்களில் விற்றமின்களும், கனியுப்புக்களும், நார்ச்சத்தும் அடங்கியிருப்பதால் இவ் உணவுகள் தினமும் அதிகளவில் உண்ணப்படலாம். பழச்சாற்றை விட முழுமையான பழங்களே சிறந்ததாகும்.
    இவ் உணவுகளில் காணப்படும் நார்ச்சத்தானது ஒருவரின் உடலிலுள்ள குளுக்கோசின் அளவு கொலஸ்ரோல் போன்றவற்றை கட்டுப் படுத்துவதுடன் மலச்சிக்கலையும் குறைக்க உதவும்.
    நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளாவன: வாழைப்பழம், அன்னாசி, மாம்பழம், விளாம் பழம், மாதுளம்பழம், சோளன் பருப்பு, கெளபி, தினை அவரைக்காய் மற்றும் எல்லாவித மான மரக்கறிகள்.
  • பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவை அதிகளவில் கொலஸ் ரோல் நிறைந்த உணவுகளாகும்.
  • உணவில் உட்பின் அளவையும் இயன்ற வரை குறைப்பது நல்லது. சமையலுக்கு தேவை யான உப்பையும் குறைந்தளவில் பாவிப்பது நல்லது. அத்துடன் உணவின் போது மேல திகமாக உப்பு சேர்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    ஊறுகாய் சிப்ஸ் (chips)மிக்சர், பக்கற்றில் அடைக்கப்பட்ட உணவுகள், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் என்பன அதி களவில் உப்பை கொண்டுள்ளன.
    அதிகளவாக உப்பை உணவில் சேர்க்கும் போது உயர் குருதி அமுக்கம், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் என்பன ஏற்படக் கூடும்.
  • சர்வதேச அளவில் உணவுக் கூம்பக முறையானது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உணவுக் கூம்பகத்தில் நாம் உண்னும் உணவில் அடங்கியிருக்க வேண்டிய உணவுகளும் அவை எந்த அளவில் எடுக்கப்பட வேண் டும் என்பவை பற்றிய விபரங்களும் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது.
  •  இலகுவில் கூறுமிடத்து ஒரு வேளை உணன்னும் உணவின்போது உணவுத்தட்டில் கால் வாசி சோறும், கால் வாசி மரக்கறியும், கால்வாசியில் புரதம்நிறைந்த உணவும், மீதிக் கால்வாசியில் பழங்களும் அடங்கியிருக்க வேண்டும்.
    உணவு அருந்திய பின் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவர் மரக்கறிகளை மட்டும் உட்கொள்பவராயின் உணவின் பின் பால் அல்லது தயிர் போன்றவற்றை உட்கொள்வது அவசியமாகும்.

Dr.P.மயூரதன்

எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள்

$
0
0

யாழ் மருத்துவபீடத்தின் 27 ஆம் அணி மாணவர்கள் தயரித்து வழங்கும்.
“எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள்”

நன்றி : RDHS, Jaffna

விற்றமின் குளிசைகளைப் போல கல்சியக் குளிசைகளைப் பாவிப்பது பாதுகாப்பானதா? – Dr.சி.சிவன்சுதன்

$
0
0

பலர் சத்துக்காகவும் நோவுக்காகவும் அதிக கல்சியக் குளிசைகளை பாவித்து வருகின்றனர். மேலைத்தேய நாடுகளிலே கல்சியக் குறைபாடு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன் காரணமாகப் பல நோய்களும் ஏற்படுகின்றன.இதனால் அந்த நாடுகளிலே கல்சியக் குளிசைகள் பெருமளவில் பாவிக்கப்பட்டு வருகின்றன.

மேலைத்தேசங்களிலே வசிக்கும் எமது உறவினர்கள் நல்ல நோக்கத்துடன் இந்தக் கல்சியம் கொண்ட சத்துக் குளிசைகள் நிரம்பிய போத்தல்களை இங்கு இருக்கும் தமது உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்தக் குளிசைகளை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எமது மக்களும் பெருமளவில் பாவித்து வருகின்றனர். அத்துடன் பலர் கல்சியக் குளிசைகள் என்று கேட்டு வாங்கியும் பாவித்து வருகின்றார்கள்.

யாழ்ப்பாணத்திலே எமது குடிதண்ணிரில் பெருமளவு கல்சியம் இருக்கின்றது. இந்த அதிகரித்த கல்சியத்தின் அளவால் ஏதாவது பிரச்சினைகள் தோன்றி விடுமோ என்ற ஏக்கமும் இருக்கிறது. அத்துடன் யாழ்ப்பாண உணவிலும் போதியளவு கல்சியம் இருக்கிறது. இந்த நிலையில் எமக்கு மேலதிக கல்சியக் குளிசைகள் தேவைதானா என்ற கேள்விஎழுகிறது.

நீரைக் கொதிக்கவைப்பதன் மூலம் நீரிலுள்ள கல்சியத்தை அகற்றிவிடமுடியும் என்ற ஒருதப்பான கருத்தும் நிலவுகிறது. கொதித்து ஆறிய நீரிலும் கொதிக்க வைக்காத கிணற்று நீரிலும் உள்ள கல்சியத்தின் அளவின் வித்தியாசம் சிறியதாகும். எமது நீரிலும் அன்றாட உணவிலும் இருக்கும் கல்சியம் எமக்குபோதுமானதாகவே இருக்கின்றது.

இதற்கும் மேலதிகமாக கல்சியக் குளிசைகளை உட்கொண்டால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.மேலதிக கல்சியம் இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பாரிசவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.

சில நோய் நிலைகளிலே எமக்கு மேலதிகமான கல்சியக் குளிசைகள் பாவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உதாரணமாக எலும்பு சம்பந்தமான சில நோய்கள் சிறுநீரகத் தொழிற்பாடு குறைவடைந்த நிலைசில குடல் சம்பந்தமான நோய்கள், சிலவகை மூட்டுநோய்கள் போன்ற நோய்நிலைகளில் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய இந்தக் கல்சியக் குளிசைகளைப் பாவிக்க முடியும்.வைத்திய ஆலோசனை இன்றிக் கல்சியக் குளிசைகள் பாவிப்பதைக் தவிர்த்துக் கொள்வது நல்லது.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

முடி உதிர்தலுக்கு புதிய சிகிச்சைமுறை –அகத்தியா

$
0
0

உலக அளவில் ஆண்கள் மத்தியில் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக வழுக்கைத்தலை மிக முக்கியமாககாணப்படுகிறது.

வழுக்கையைத் தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள் கடைசியாக முடி மாற்று அறுவைச் சிகிச்சை முறை என்று பல வகை மருத்துவதீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை நிரந்தரத் தீர்வைத் தரவில்லை என்றே பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் டர்ரம் பல் கலைக்கழகமும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவமையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில் மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில் இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து அவற்றை பரிசோதனைக் கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால் அந்தப் பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறாள்கள்.

மொத்தம் ஏழு பேரிடம் செய்தபரிசோதனைகளில் ஐந்து பேருக்கு ஆறு வாரங்களில் புதிய முடிவளர்வதை இவர்கள் கண்டிருப்பார்கள்.

இந்த ஆய்வின் முடிவில் வழுக்கையை முழுமையாக, நிரந்தரமாககுணப்படுத்தமுடியும் என்பதற்கான சாத்தியக் கூற்றை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தசிகிச்சைமுறை எதிர்காலத்தில் வழுக்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்
என எதிர்பார்க்கப்படுகின்றது.

அகத்தியா

Viewing all 878 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>